கன்டெய்னர் லாரியால் விபத்து-பெங்களூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம் : சென்னை-பெங்களூர் இடையிலான நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி ஒன்றால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து இன்று காலை பெங்களூர் நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. காஞ்சிபுரம் அருகே லாரி வந்தபோது திடீரென தாறுமாறாக ஓடியது. பின்னர் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது அடுத்தடுத்து மோதிக் கவிழ்ந்தது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் உயிரிழந்தனர். வேனில் பயணித்த நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
நடுச் சாலையில் லாரி கவிழ்ந்து விழுந்ததால் அச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications