தமிழகத்தில் உச்சத்தில் வரதட்சனை கொடுமை வழக்குகள்: பாலியல் பிரச்சனைக்கு இரண்டாமிடம்
நெல்லை: தமிழகத்தில் வரதட்சனை கொடுமை வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளன என்று மாநில மகளிர் ஆணைய தலைவி சற்குண பாண்டியன் தெரிவித்தார்.
மாநில மகளிர் ஆணைய தலைவி சற்குணபாண்டியன் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் பிரச்சனைகள் தொடர்பாக நிலுவையி்ல் உள்ள மனுக்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறி்யதாவது,
கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் எங்கள் ஆணையத்திற்கு 6470 மனுக்கள் வந்துள்ளன. இதில் 4 ஆண்டுகளில் 3049 மனுக்களுக்கு ஆணையம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், 3421 மனுக்கள் நிலுவையில் உள்ளன.
மாநில அளவில் வரதட்சனை கொடுமை குறித்தே பெண்கள் அதிகளவில் மனுக்கள் அளிக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக பாலியல் பிரச்சனை உள்ளது.
சிசுக்களை கருவிலேயே ஸ்கேன் மூலம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் அழிக்கும் செயல்கள் 6 மாவட்டங்களில் அதிகம் உள்ளது. மதுரை, தேனி, தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்த நடைமுறையை ஒழிக்க மகளிர் ஆணையம் போராடி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இன்று நிலுவையில் உள்ள 20 வழக்குகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது என்றார் அவர்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications