டீசல் இல்லை.. பஸ்கள் ஓடவில்லை: ஜெயலலிதா புகார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளுக்கான டீசல் மற்றும் ஆயில், போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள பங்க்குகளில் நிரப்பப்படுகிறது.
இவற்றை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஐஓசி) வினியோகிக்கிறது. டீசலுக்கான பணத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை வங்கி காசோலை மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஐஓசிக்குச் செலுத்தும். இதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறையாகும்.
இந் நிலையில், கடந்த சில மாதங்களாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஐஓசிக்கு முறையாக பணம் சென்று சேராததன் காரணமாக, பணம் கொடுத்தால் மட்டுமே டீசல் வழங்கப்படும் என்று ஐஓசி தெரிவித்து விட்டது.
ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், டீசலுக்கான பணத்தைக் கொடுக்க முடியாமல் திணறுகின்றன.
லாபத்தில் இயங்குவதாகக் கூறப்படும் மாநகர போக்குவரத்துக் கழகம் கூட ரூ.18 கோடி அளவுக்கு டீசல் பாக்கி வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான பஸ்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் டயர்கள், உதிரி பாகங்கள் இல்லாததன் காரணமாகவும் நூற்றுக்கணக்கான பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் நிர்வாகச் சீர்கேடும், ஊழலும்தான்.
மேலும், பெரும்பாலான அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாதச் சம்பளம் தாமதமாக வழங்கப்படுவதாகவும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பயன்கள் ஓர் ஆண்டாக நிலுவையில் இருக்கின்றன என்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். (ஜெவுக்கு ஒரு கேள்வி: நிலைமை இப்படி இருந்தால் சமீபத்திய அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத் தேர்தலில் திமுக தொழிற்சங்கத்தை தொழிலாளர்கள் ஏன் வெல்லச் செய்தனர்?!)
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இது போன்ற நிலை நீடித்தால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளாவதுடன், விமானக் கட்டணம் அளவுக்கு கட்டணத்தை வசூலிக்கும் ஆம்னி பஸ்களில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.
பஸ்களுக்கான டீசலைக் கூட வாங்க முடியாத அளவுக்கு, தொழிலாளர்களின் ஓய்வூதியப் பயன்களை நிறுத்தி வைக்கக்கூடிய அளவுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழகங்களை முடங்கச் செய்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களை முடங்க வைத்த திமுக ஆட்சி முடங்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications