சிபிஐ ரெய்டுக்குள்ளான தமிழ் மையத்துடன் இணைந்து சங்கமம் நிகழ்ச்சியை அரசு நடத்துவதற்கு எதிராக வழக்கு
சென்னை: சிபிஐ சோதனைக்குள்ளான தமிழ் மையம் அமைப்புடன் இணைந்து, தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித்துறை சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் இதைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சமீபத்தில் சிபிஐ சோதனைக்குள்ளானது தமிழ் மையம் என்ஜிஓ அமைப்பு. இந்த நிலையில் அரசு அல்லது அரசு சார்பிலான எந்தத் துறையும் அந்த அமைப்புடன் தொடர்பு வைத்துக் கொண்டால் அது சிபிஐ நடத்தி வரும் விசாரணையைப் பாதிப்பதாக அமையும். மேலும், சிபிஐயின் தீவிர கண்காணிப்பில் உள்ள ஒரு அமைப்புடன் இணைந்து செயல்பட்டால், அந்த அமைப்புக்கு நற்பெயரை ஏற்படுத்தித் தருவது போல மாறி விடும்.
மேலும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் மக்களின் வரிப்பணமும் செலவிடப்படுகிறது. எனவே, சிபிஐயின் கண்காணிப்பில் உள்ள அமைப்புக்காக மக்கள் வரிப்பணத்தை செலவிடுவது தவறாகும்.
தமிழ் மையம் அமைப்பில் டிசம்பர் 15ம் தேதி நடந்த சோதனையின்போது பல சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் சிக்கியதாக சிபிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. எனவே தமிழ் மையம் அமைப்புடன் அரசு இணைந்து செயல்படக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications