ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள்-தீப்பிடித்ததால் ஓட்டம்
சென்னை: சென்னையில் கனரா வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. ஆனால், எந்திரத்தில் தீப்பிடித்துக் கொண்டதால் கொள்ளையர்கள் தப்பியோடிவி்டடனர்.
சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். எந்திரம் இன்று காலை உடைந்து கிடந்தது.
இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தியதில் நேற்றிரவு கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்திருப்பது தெரிய வந்தது. ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள ஸ்கீரினை அவர்கள் உடைத்தபோது, எந்திரத்தில் தீப்பிடித்துள்ளது.
இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்தக் காட்சிகள் ஏசிஎம் மைய கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது.
அதில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர். இந்த ஏடிஎம் மையத்துக்கு காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications