வாஷிங் மெஷினில் போட்டு குழந்தையை கொன்ற தாய் தற்கொலை
திருவனந்தபுரம்: கேரளாவில் பெற்ற குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டுக் கொலை செய்த தாய் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம் ஆழப்புழா அருகே உள்ள குட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான். அவருடைய மனைவி சுமா. சில வாரங்களுக்கு முன் சுமா தனது 8 மாத குழந்தையை வீட்டில் இருந்த வாஷிங் மெஷினில் போட்டு கொலை செய்தார். இது தொடர்பாக ஆலப்புழா போலீசார் வழக்கு பதிவு செய்து சுமாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு ஆலப்புழா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் சுமாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. விடுதலையான அவரை கணவர் ஜான் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். குழந்தையை கொலை செய்ததால் சுமா மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற சு்மா வீடு திரும்பவில்லை. கணவர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கணவர் ஜான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சுமாவை தேடி வந்தனர். அப்போது குட்டநாடு பகுதியில் பூங்கரை ஆற்றின் கரையில் சுமாவின் மணிபர்ஸ் கிடந்தது.
அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுமாவின் மணிபர்சில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் எனக்கு மனநிலை சரியில்லை என்று எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications