மேலும் 10 லட்சம் இலவச டிவிக்களை வழங்க அரசு திட்டம்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இலவச வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டிகள் வழங்கும் திட்டத்தை நடை முறைப்படுத்துவது குறித்து அமைக்கப்பட்ட சட்டமன்றக்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் 21வது கூட்டம் இன்று காலை முதல்வர் கருணாநிதி தலைமையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தி.மு.க. சார்பில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் யசோதா (காங்.), அப்துல் பாசித் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்), ரவிகுமார் (விடுதலை சிறுத்தைகள்), சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட முடிவுகள்:
2006 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழக மக்களுக்கு தேர்தல் அறிக்கை மூலம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2006 செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் முதல் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இதுவரை ஐந்து கட்டங்களில் 1 கோடியே 62 லட்சத்து 80 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகள் ஒளிவு மறைவற்ற முறையில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை ஏறத்தாழ 1 கோடியே 52 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் வழங்கப் படுவதற்காக கூடுதல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தேவை என அளித்துள்ள கோரிக்கைகளை பரிசீலித்து, இதுவரை வழங்கப்படாமல் உள்ள தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கிட நடப்பாண்டில் 6-ம் கட்டமாக மேலும் 10 லட்சம் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்வதென ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications