மணல் அள்ள தடை-கருணாநிதியை சந்தித்து மனு கொடுக்கும் லாரி உரிமையாளர்கள்
நெல்லை: இயந்திரம் மூலம் மணல் அள்ள அனுமதி வழங்கக் மணல் லாரி உரிமையாளர்கள் இன்று தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுக்கவுள்ளனர்.
ஆறுகள் மற்றும் அரசு மணல் குவாரிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆட்கள் மூலம் மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் கூலிக்கு ஆட்கள் கிடைக்காததால் மணல் அள்ள காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே இயந்திரம் மூலம் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி கடந்த 7-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக மணல் லாரி உரிமையாளர்கள், வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனு கொடுக்க உள்ளனர்.
இதற்கிடையே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் நேற்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். முன்னதாக அவர்கள் அந்தந்த ஊர்களில் லாரிகளை வரிசையாக நிறுத்தி போராட்டத்தை வெளிப்படுத்தினர். பாளை டக்கரம்மாள்புரம் அருகே நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications