பொங்கலையொட்டி 5 கேரள மாவட்டங்களில் அரசு விடுமுறை
திருவனந்தபுரம்: தமிழகத்தில் ஓணம் பண்டிகையின்போது சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படுவதைப் போல, பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஐந்து மாவட்டங்களில் உள்ளூ்ர் விடுமுறை விடுவதற்கு கேரள முதல்வர் அச்சுதானந்தன் உத்தரவிட்டுள்ளார்.
மலையாளிகள் விமரிசையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, தமிழகத்தில் உள்ள மலையாளிகளும் உற்சாகமாக கொண்டாடுவார்கள். இதையடுத்து தமிழகத்தில் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் ஓணம் பண்டிகையின்போது உள்ளூர் விடுமுறை அளிக்கபப்ட்டு வருகிறது.
இதைச் சுட்டிக்காட்டி கேரளாவிலும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் ஐந்து மாவட்டங்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேரள அரசை பல்வேறு தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. சமீபத்தில் இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியும் கடிதம் மூலம் கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது அந்தக் கோரிக்கையை அச்சுதானந்தன் ஏற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு, திருவனந்தபுரம், பாலக்காடு, இடுக்கி, பத்தனம்திட்டா, வயநாடு ஆகிய ஐந்து மாவட்டங்களில் விடுமுறை அளிக்க அச்சுதானந்தன் அனுமதி அளித்தார்.
இதன்படி, வரும் ஜனவரி 15 ஆம் தேதி இந்த மாவட்டங்களில் பொங்கல் விடுமுறை என கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications