செஞ்சி அருகே பிச்சைக்காரரை கொலை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை
செஞ்சி: செஞ்சி அருகே பிச்சைக்காரர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது மேட்டுப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ் (61).
இவர் கடந்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன் 60 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அருள்தாஸ் மனைவியிடம் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்து சந்தேகமடைந்த அருள்தாஸ், அவரை தடியால் தாக்கினார். இதில் பிச்சைக்காரர் பலத்த காயம் அடைந்து இறந்து போனார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அருள்தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அருள்தாஸுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications