பொங்கல் பண்டிகை-பிரதீபா பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொங்கல் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் பர்னாலா, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் திருநாளில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் வளமும், நலமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.

இத்திருநாள் அனைத்து பிரிவினரையும் அன்பால் இணைத்து நாட்டு முன்னேற்த்திற்கு உழைக்க உற்சாகம் அளிக்கட்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியின் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

இந்த பண்டிகை நாடு முழுவதும் பல விதமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்னாள் மக்கள் அனைவருக்கும் வளமான, மகிழ்ச்சியான வாழ்வை வழங்க வாழ்த்துகிறேன் என்றார்.

இதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தி.க.தலைவர் கி.வீரமணி, ஆர்.எம்.வீரப்பன், சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+