2006 முதல் ஜார்கண்டில் அழுகிக் கொண்டிருக்கும் 6 ஆயிரம் குவிண்டால் தானியங்கள்
ராஞ்சி: நாட்டில் உணவுப் பொருட்களின் விலை விஷமாய் ஏறிக்கொண்டிருக்கையில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஜார்கண்ட் மாநில உணவுக் கழகத்தின் குடோனில் 6 ஆயிரம் குவிண்டால் உணவுதானியங்கள் அழுகிக் கொண்டிருக்கின்றன. இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
சுமார் 5 ஆயிரம் குவிண்டால் கோதுமையும், ஆயிரம் குவிண்டால் அரிசியும் ரான்ச்சியில் உள்ள ஜார்கண்ட் மாநில உணவுக் கழக குடோனில் அழுகிக் கொண்டிருக்கிறது. இவை வேலைக்கு உணவு வழங்கும் திட்டத்திற்காக பயன்படுத்த வேண்டியவை. ஆனால் பயன்படுத்தாமல் கடந்த 2006-ம் ஆண்டு முதல் அங்கேயே அழுகுகிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த வார துவக்கத்தில் தாணிய இருப்பு குறி்த்து சரிபார்த்தபோது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்தது. இவற்றை எங்காவது அப்புறப்படுத்த அதிகாரிகள் முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனதாகவும் தெரிகிறது.
இது ஒரு முக்கியமான விவகாரம் ஆகும். விசாரணைக்குப்பின் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் மதுரா மஹதோ நிருபர்களிடம் கூறினார்.
பீகாரில் இருந்து பிரிந்து ஜார்கண்ட் கடந்த 10 ஆண்டுகளாக தனி மாநிலமாக இருந்தாலும், அதன் உணவுக் கழகம் இன்னும் பீகார் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.
ஜார்கண்ட் மக்கள் தொகையில் 54 சதவிகிதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். அம்மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications