நான் ராஜினாமா செய்வதாக சொல்லவேயில்லையே-அமைச்சர் அழகிரி

திமுகவில் மாநில அளவிலான முக்கியப் பொறுப்பு வேண்டும் என்று அழகிரி கோரி வருவதாக தெரிகிறது. இதை வலியுறுத்தியும், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய கனிமொழி, அமைச்சர் பூங்கோதை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய ராசாவை கட்சியை விட்டு நீக்கக் கோரியும் முதல்வரிடம் சமீபத்தில்அழகிரி கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இதை செய்ய இயலாவிட்டால் தான் கட்சி மற்றும் அமைச்சர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவித்தன.
இருப்பினும் அழகிரி தன்னிடம் ராஜினாமா கடிதம் எதையும் தரவில்லை என்று முதல்வர் மறுத்து விட்டார். அதேசமயம், கனிமொழியை வெகுவாகப் பாராட்டி ஒரு நிகழ்ச்சியிலும் பேசினார். கனிமொழி ஏற்பாடு செய்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியிலும்அவர் கலந்து கொண்டார். இதன் மூலம் அழகிரிக்கு மறைமுகமாக தனது பதிலை முதல்வர் தெரிவித்ததாக கருதப்பட்டது.
இந்த நிலையில், நேற்று திடீரென முதல்வர் கருணாநிதியை அழகிரி சந்தித்தார். இன்று அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ள நிலையில் அழகிரி, முதல்வரை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று அழகிரி டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்து கருணாநிதியுடனான சந்திப்பு குறித்தும், அவரது ராஜினாமா குறித்த செய்தி தொடர்பாகவும் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த அழகிரி,
நான் ராஜினாமா செய்யப்போவதாக வந்த தகவல் பற்றி எனது தந்தையும், திமுக தலைவருமான மு.கருணாநிதி ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார். பதவி கேட்கும் பழக்கம் எனக்கு இல்லை. அவர்களாக கொடு்த்தால் அதை ஏற்றுக் கொண்டு கட்சிக்காக பாடுபடுவேன் என்றார்.
மாற்றியமைக்கப்டும் மத்திய அமைச்சரவையில் திமுக வேட்பாளர்கள் இருப்பார்களா, இல்லையா என்று கேட்டதற்கு அவர் அது பற்றி கூறுவதற்கு நான் ஒன்றும் பிரதமர் கிடையாதே என்றார்.
2ஜி விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் அ. ராசா மீது நான் எந்தவித கட்சி நடவடிக்கையும் எடுக்கச் சொல்லி வலியுறுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications