புதுவை காங். உடைகிறது-எம்.எல்.ஏ. பதவியை உதறினார் ரங்கசாமி

இன்று காலை சட்டசபைக்கு வந்த ரங்கசாமி அங்கு சட்டசபை செயலாளரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதிய கட்சி தொடங்கப் போவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ரங்கசாமியின் ஆதரவாளர்களும் தங்களது அமைச்சர், எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் முதல்வர் வைத்திலிங்கம் ஆட்சி கவிழும் அபாயமும் அதிகரித்துள்ளது. மேலும் கட்சியும் உடைகிறது.
புதுவை சட்டசபைக்கும், தமிழக சட்டசபையுடன் சேர்த்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இப்போது ரங்கசாமி ரூபத்தில் எழுந்துள்ள புதிய சிக்கலால் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முதல்வர் பதவியிலிருந்து அகற்றப்பட்டது முதல் ரங்கசாமி அதிருப்தியுடன் இருந்து வந்தார். அவரும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் புது கட்சி தொடங்க வேண்டும் என ரங்கசாமியை அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்தே அவர் ராஜினாமா செய்துவிட்டு புதிய கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்துள்ளார்.
ரங்கசாமியை சமாதானப்படுத்த கட்சி மேலிடம் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வந்தது. ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை தோல்வியில் முடிவடைந்தன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications