தமிழகத்தில் தைப்பூசம்-முருகன் கோவில்களில் கோலாகலம்
பழனி: தைப்பூசத் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள முருகன் தலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பழனியில் தைப்பூசத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இன்று தைப்பூசமாகும். இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பழனியில் கடந்த 14ம் தேதி தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.
பல்வேறு காவடிகளை ஏந்தியபடி பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வந்துள்ளனர். இன்று மாலை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த தேரோட்டம், நான்கு ரத வீதிகளிலும் நடைபெறும். அதன் பின்னர் 6 மணியளவில் தெப்போற்சவம் நடைபெறும். இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல திருச்செந்தூரிலும் தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது. இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. மூன்றரை மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடத்தப்பட்டது. மாலையில் தேர் பவனி நடைபெறுகிறது.
சென்னை வடபழனி, திருப்போரூர் முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் தலங்களிலும் இன்று தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications