கர்நாடகத்தில் இன்று பந்த்... பெங்களூரில் பதட்டம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு சட்டப்படி வழக்குத் தொடர ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் அனுமதி அளித்ததை எதிர்த்து மாநிலம் முழுவதும் சனிக்கிழமை முழு அடைப்பு நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

முதல்வர் எடியூரப்பா, மாநில உள்துறை அமைச்சர் ஆர்.அசோக் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்படியும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படியும் வழக்குத் தொடர இரு வழக்கறிஞர்களுக்கு பரத்வாஜ் வெள்ளிக்கிழமை இரவு அனுமதி அளித்துவிட்டதை அறிந்ததும் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள எடியூரப்பாவின் வீட்டுக்கு பாஜக தலைவர், அமைச்சர்கள் விரைந்தனர். எடியூரப்பாவுடன் அவர்கள் அவசர ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்குப் பிறகு நிருபர்களிடம் ஈஸ்வரப்பா கூறுகையில், "பரத்வாஜின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது. அரசியல் சட்டத்துக்கு முரணானது. அரசியல் நோக்கம் கொண்டது. ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து சட்ட ரீதியில் போராடுவோம்.

இந்த நாள் கர்நாடக வரலாற்றில் கறுப்பு நாள். அரசுக்கு எதிரான சதி ஆளுநர் மாளிகையிலேயே உருவானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க நினைக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஆளுநர் துணை போய்விட்டார். அவர் காங்கிரஸ் ஏஜென்ட் என்று நாங்கள் கூறிவந்ததை இன்று நிரூபித்துவிட்டார்.

அவரது இந்தச் செயலைக் கண்டித்து சனிக்கிழமை மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவோம். இதற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்," என்றார்.

அரசியல் அமைப்புக்கு எதிரானது! -பாஜக

முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் ஆர். அசோக் மீது, ஊழல் புகார்கள் தொடர்பாக வழக்கு தொடர ஆளுநர் பரத்வாஜ் அனுமதி வழங்கியுள்ளது அரசியல் உள்நோக்கம் கொண்டது; அரசமைப்புச் சட்டத்தை மீறிய செயல் என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

பெங்களூரில் பதட்டம்:

கடைகள், நிறுவனங்கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஆளும்கட்சியே பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால், தலைநகர் பெங்களூர் மற்றும் முக்கிய நகரங்களில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

ஆட்டோக்கள், டாக்சிகள் போன்றவை சொற்ப அளவிலேயே இயங்குகின்றன. அரசுப் பேருந்துகள் முழு அளவில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான சூழல் என்று தெரிந்தால் மட்டும் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்படும் என போக்குவரத்து அதிகாரி விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

ரயில் மற்றும் விமான போக்குவரத்து வழக்கம்போல இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் கல்லூரிகள் மூடல்

இதற்கிடையே கர்நாடகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகள் - கல்லூரிகள் இன்று மூடப்பட்டுவிட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+