ஜெகன்மோகன் ரெட்டி ஆர்ப்பாட்டம்... குவிந்தனர் தொண்டர்கள்!

மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி மகன் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகினார். இன்னும் ஓரிரு மாதங்களில் புதிய கட்சி தொடங்குகிறார். சில வாரங்களுக்கு முன்பு அவர் விஜயவாடாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். ஜல தீக்ஷா என்ற பெயரில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.
இந்த நிலையில், பெட்ரோல் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து விசாகப்பட்டினம் ராமகிருஷ்ணா கடற்கரையில் இன்று பெரும் தர்ணா போராட்டம் நடத்தினார் ஜெகன்.
ஜனதீக்ஷா எனும் இந்தப் போராட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தர்ணாவில் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், "ஏழை-நடுத்தர மக்கள் அத்தியாவசிய விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்தினால் அத்தியாவசிய பொருட்கள் பல மடங்கு உயர்ந்து விடும். இதை தடுக்க பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைக்கவேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications