மருத்துவ முகாம்-சோதனை கருவிகள் இல்லாமல் வந்த டாக்டர்கள்
செய்துங்கநல்லூர்: செய்துங்கநல்லூரில் மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான முகாமில் சோதனை கருவிகள் இல்லாமல் டாக்டர்கள் வந்ததால் மாற்று திறனாளிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான முகாம் செய்துங்கநல்லூரில் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தா தலைமை வகித்தார். நலிவுற்றோர் தாசில்தார் நயினால் முன்னிலை வகித்தார். முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மாற்று திறனாளிகள் ஊனம் 80 சதவீதம் இருந்தால் உடனே ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்ய ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் சான்றிதழ் வழங்க வந்த டாக்டர்கள் எவ்வித உபகரணமும் இல்லாமல் வந்ததால் அவர்களால் ஊனத்தின் தன்மையை அறிய முடியவில்லை.
மேலும் சோதனை கருவி இல்லாததால் முகாமுக்கு வந்த அனைவரும் நாளை 24ம்தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து மாற்று திறனாளிகள் கூறுகையில், முகாமில் கலந்து கொள்வதற்காக நாங்கள் பணத்தையும் பொருட்படுத்தாமல் ஆட்டோவில் வந்தோம். ஆனால் இங்கு கண் டாக்டர் வரவில்லை. வநத டாக்டர்களும் சோதனை கருவிகள் கொண்டு வரவில்லை.
தூத்துக்குடிக்கு சென்றுதான் சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் இந்த முகாம் எதற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை. எங்களுக்கு இந்த வசதி கூட அதிகாரிகளால் செய்து தர முடியவில்லை என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது என்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications