இந்துஸ்தானி இசை மேதை பண்டிட் பீம்சென் ஜோஷி மரணம்

88 வயதாகும் ஜோஷி பாரதரத்னா விருது பெற்றவராவார். கடந்த டிசம்பர் 31ம் தேதி வயோதிகம் காரணமாக அவர் புனேயில் உள்ள சஹாயத்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
கடந்த 2008ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினைப் பெற்றார் ஜோஷி.
கர்நாடக மாநிலம் காடக் நகரில் 1922ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பிறந்தவர் ஜோஷி. அவரது குடும்பத்தில் சகோதர, சகோதரிகள் 16 பேர். அதில் மூத்தவர் ஜோஷி. காயல் என்ற பாடல் வகையில் நிபுணத்துவும் பெற்றவர். இந்துஸ்தானி இசைப் பரம்பரையில் வந்தவர். பஜன் மற்றும் அபங் பாடல்களிலும் இவர் தலை சிறந்தவர்.
குரு -சிஷ்யப் பரம்பரையுடன் நின்று கொண்டிருந்த காயல் பாடல்களை பிரபலப்படுத்தி வெளியுலகுக்குக் கொண்டு வந்தவர் பீம்சென் ஜோஷி.
1943ம் ஆண்டு ஜோஷி மும்பைக்கு இடம் பெயர்ந்தார். அங்குதனது 19வயதில் முதல் முறையாக ரேடியோவில் இந்துஸ்தானி பாடலைப் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
தனது அபாரமான பாடல் திறமையாலும், நிபுணத்துவத்தாலும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் ஜோஷி.
இவர் 1985ம் ஆண்டு பாடிய மிலே சுர் மேரா துமாரா இசை ஆல்பம் இந்தியா முழுவதும் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்ற பாடலாகும். தேச பக்திப் பாடலான இதில் ஜோஷி உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு பாடி நடித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
திரைப்படங்கள் பலவற்றிலும் கூட பாடியுள்ளார் ஜோஷி. 2002ம் ஆண்டுடன் பாடுவதை நிறுத்திக் கொண்டார் ஜோஷி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications