போலீஸ் ஸ்டேஷனில் வைத்து மகளுக்குக் கத்திக் குத்து-தந்தை கைது
சென்னை: சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென தனது மகளைக் குத்தி விட்டார் ஒரு
தந்தை. இதையடுத்து அந்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் கலைவாணி. இவர் தனது தந்தையின் பேச்சை மீறி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார் ஏழுமலை. இதையடுத்து இரு தரப்பையும் செங்குன்றம் போலீஸார் காவல்நிலையத்திற்கு வரவழைத்து பஞ்சாயத்து பேசினர்.
அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகளைக் குத்தி விட்டார் ஏழுமலை. ரத்த வெள்ளத்தில் கலைவாணி கீழே விழ போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கலைவாணியை போலீஸார் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
ஏழுமலையைக் கைது செய்த போலீஸார் அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications