தனியார் பால் ஏஜென்டுகளின் ஸ்டிரைக்கால் பாலுக்கு சென்னையில் தட்டுப்பாடு
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தனியார் பால் ஏஜென்டுகள் நடத்திய ஸ்டிரைக் காரணமாக தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை தடைபட்டது. இனால் ஆவின் பாலைத் தவிர தனியார் பாலை வாங்குவோர் பாதிப்பை சந்தித்தனர்.
தமிழகத்தில் ஆவின் பால் தவிர திருமலா, ஆரோக்கியா, ஹெரிடேஜ் உள்பட பல்வேறு தனியார் நிறுவன பால்களும் விற்பனையாகி வருகின்றன. இவற்றில் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் கலக்கலாம் என்பதால் சாலையோர டீக்கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில் இவற்றைத்தான் பெருமளவில் வாங்குகின்றனர். பொதுமக்களும் இதை வாங்குகின்றனர்.
தனியார் பாலை விட ஆவின் பாலை விலை குறைவாக உள்ளது. இந்த நிலையில் தற்போது திருமலா, ஆரோக்கியா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் திடீரென சமீபத்தில் விலை உயர்வை அதிகரித்தன.
இதற்கு தனியார் பால் ஏஜென்டுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களுக்குரிய கமிஷன் தொகையை உயர்த்தாமல் பால் விலையை மட்டும் உயர்த்தியதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை வலியுறுத்தி கிட்டத்தட்ட 7000 ஏஜென்டுகள் இன்று பாலை வாங்காமல், விநியோகிக்காமல் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால் கடைகளுக்குப் பால் விற்பனை தடைபட்டது.
இதன் காரணமாக தனியார் பால் எதுவும் இன்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று விற்பனையாகவில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். ஆவின் பால் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. அதுவும் கூட விரைவில் விற்றுப் போனதால் எந்தப் பாலும் இல்லாத நிலை பல பகுதிகளில் காணப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications