சென்னை-கோவை டூரன்டோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவங்கியது
சென்னை: எங்கும் நிற்காமல் செல்லும், டூரன்டோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, சென்னை-கோவை இடையே நேற்று துவங்கியது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.
சென்னை-கோவை இடையே நான்-ஸ்டாப் டூரன்டோ எக்ஸ்பிரஸ் ரயில் தனது முதல் பயணத்தை நேற்று மாலை 4 மணிக்கு துவங்கியது. இதற்கான துவக்க விழா நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது.
இந்த ரயில் இன்று கோவையிலிருந்தும், நாளை சென்னையிலிருந்தும் தனது வழக்கமான பயணத்தை மேற்கொள்ளும். இந்த குளு, குளு ரயில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயங்கும்.
டூரன்டோ எக்ஸ்பிரஸ் (12243) தினமும் காலை 6. 50 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு கோவை சென்றடையும். மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து பிற்பகல் 3. 05 மணிக்கு புறப்படும் டூரன்டோ எக்ஸ்பிரஸ் (12244) இரவு 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த ரயில் கோவை எக்ஸ்பிரஸைவிட ஒரு மணி நேரம் குறைவான நேரத்தில் இலக்கை அடையும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் செய்யப்பட்டுள்ள இந்த ஏசி ரயிலில் இருக்கை வசதி கொண்ட ஒரு முதல் வகுப்பு சொகுசு பெட்டியும், 7 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் உள்ளன. இதில் 515 பேர் பயணம் செய்யலாம்.
சென்னையிலிருந்து கோவைக்கு முதல் வகுப்பு கட்டணம் ரூ.1,260, இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.625. கோவையிலிருந்து சென்னைக்கு முதல் வகுப்பு ரூ.1,235, இரண்டாம் வகுப்பு ரூ.610. இந்த கட்டணங்களில் உணவும் அடங்கும்.
ஏற்கனவே சென்னையில் இருந்து டெல்லிக்கு ஒரு டூரன்டோ எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications