இலங்கை தாக்குதல் தொடர்ந்தால் தேர்தலை புறக்கணிப்போம்: மீனவர் சங்கங்கள்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் தாக்குதல் இருக்காது என்று மத்திய-மாநில அரசுகள் உறுதியளிக்காவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம் என்று தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இலங்கையில் போர் முடிந்த பிறகு எந்த பிரச்சனையும் இன்றி சுதந்திரமாக மீன் பிடிக்கலாம் என்று எண்ணியிருந்த தமிழக மீனவர்கள் எண்ணம் பொய்யானது. போர் முடிந்த பிறகும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை மீன் பிடிக்கவிடாமல் தாக்கி வருகின்றது. கடந்த 10 நாட்களில் மட்டும் 2 தமிழக மீனவர்களை இறக்கமின்றி கொன்றுள்ளது. இந்த சம்பவங்களால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அஞ்சுகின்றனர்.
இது பற்றி தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் செயலாளர் சேசுராஜா கூறுகையில்,
இலங்கையில் போர் முடிந்த பிறகும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை மீன் பிடிக்கவிடாமல் தாக்குவதும், வலைகள் மற்றும் படகுகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் குறித்து மத்திய-மாநில அரசுகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை.
இலங்கை கடற்படைக்கு மத்திய-மாநில அரசுகள் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் அதை எல்லாம் இலங்கை அரசு கண்டு கொள்ளவேயில்லை. தமிழக மீனவர்கள் மீது அக்கறை காட்டாத இலங்கைக்கு அரசுக்கு மத்திய அரசு உதவக் கூடாது. வருடத்திற்கு பல கோடி அந்நிய செலாவணி ஈட்டித்தரும் மீனவர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும்.
கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று மத்திய-மாநில அரசுகள் உறுதியளிக்க வேண்டும். இல்லையெனில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications