சபரிமலை விபத்து குறித்து நீதி விசாரணை-கேரள அரசு உத்தரவு
திருவனந்தபுரம்: கடந்த 14-ம் தேதி சபரிமலையில் நடந்த விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. 102 பக்தர்கள் பலியான இந்த சம்பவம் குறித்து கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விசாரிப்பார்.
மகரஜோதியைப் பார்த்துவிட்டு பக்தர்கள் திரும்பிக் கொண்டிருக்கையில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது. இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த விசாரணையின் முக்கியத்துவம் குறித்து தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அவர் விசாரணை நடத்த ஒரு நீதிபதியை நியமிப்பார் என்று நம்புகிறோம் என கேரள முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் தெரிவித்தார்.
சபரிமலை விபத்து குறித்து முரண்பாடான அறிக்கை சமர்பித்த வனத்துறை மற்றும் தேவசம்போர்டிடம் உயர் நீதிமன்ற பெஞ்ச் ஒன்று விசாரித்து வருகிறது.
அந்த பெஞ்ச் வனத்துறையை தனது அறிக்கையை மறுஆய்வு செய்யுமாறும், சபரிமலை கோவிலின் சிறப்பு கமிஷனரிடம் புதிதாக ஒரு அறிக்கை தயாரித்து சமர்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் நீதி விசாரணை முடிவை கேரள அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications