தனியார் ஷோரூமில் தீவிபத்து - ரூ. 50 லட்சம் மதி்ப்பிலான பொருட்கள் நாசம்
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் கடையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
அம்பை பூக்கடை பஜாரில் தனியார் ஷோரூம் உள்ளது. இங்கு டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட வீ்ட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன் தினம் இரவு கடை ஊழியர்கள் கடையைப் பூட்டி விட்டு சென்றனர்.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் பூட்டிய கடைக்குள் இருந்து புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அருகில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
உரிமையாளர் வந்து திறந்து பார்த்தபோது கடையில் தீ பற்றி எரிந்தது. அங்கிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் எரித்து சாம்பலாயின. இது குறித்து அம்பை, தென்காசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்து மின்கசிவால் ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அம்பை இன்ஸ்பெக்டர் காளியப்பன் விசாரித்து வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications