அகமதாபாத்தில் 5 அடுக்கு கட்டிடம் இடிந்து 5 பேர் பலி-7 பேர் காயம்
அகமதாபாத்: அகமதாபாத்தில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த 5 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்ததில் 5 பேர் உயிர் இழந்தனர்.
கலுபூரில் உள்ள சௌடகர்னி போல் பகுதியில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு 5 அடுக்கு மாடி கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. இன்று காலை திடீர் என்று கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்தனர்.
இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கட்டிடம் இடிந்ததில் அருகில் இருந்த வீடுகளும் சேதம் அடைந்தன.
இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர், ஒரு தீயணைப்பு அதிகாரி உள்பட 7 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டுள்ளனர் என்று அகமதாபாத் நகர தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி ராஜேஷ் பட் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடம் குறுகிய சாலையில் அமைந்துள்ளதாலும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ளதாலும் மீட்புப் பணிகள் தாமதமாகின்றன என்று அதிகாரிகள் கூறினர்.
அவசர கால சேவை ஆம்புலன்ஸ்கள் 5 அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்படுகிறது. விரைவில் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று துணை முனிசிபல் கமிஷனர் ஐஆர் படேல் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications