விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய நண்பர் கொழும்பில் கைது
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமான தொழிலதிபரை இலங்கை உளவுப் பிரிவினர், கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக இலங்கை தமிழர் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு நகரின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவராவார். மிகப் பெரிய கோடீஸ்வரரான அவருக்கு கொழும்பு மற்றும் வெள்ளவத்தைப் பகுதிகளில் இரண்டு ஹோட்டல்கள் உள்ளன. இது போக 12 நிறுவனங்களின் தலைவராகவும் அவர் இருக்கிறார். சில காலம் வெளிநாட்டில் வசித்து வந்தார்.
இவரது உதவியாளரான வேலுப்பிள்ளை சந்திரகுமார் என்பவரை சுவிட்சர்லாந்தில் வைத்து சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர் தற்போது இந்தத் தொழிலதிபர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வசம் தற்போது அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளாராம்.
முன்பு இந்தத் தொழிலதிபர் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்தார். பின்னர் பிரபாகரனின் ஆலோசனையின் பேரில் அவர் கொழும்பு திரும்பினார். பிரபாகரன் ஆலோசனையின் பேரிலேயே அவர் கொழும்பில் பல இடங்களில் வர்த்தக நிறுவனங்களைத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள பிரமுகரின் பெயர், விவரம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications