திருச்செந்தூரில் முத்துக்குமார் சிலையைத் திறக்கிறார் திருமாவளவன்
சென்னை: ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த சென்னை இளைஞன் முத்துக்குமாரின் உருவச் சிலையை, அவரது சொந்த ஊரான திருச்செந்தூரில் திறந்து வைக்கவுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
இதுகுறித்து அக்கட்சி செய்தித்தொடர்பாளர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிங்கள இனவெறிப் போரை தடுத்து நிறுத்தக் கோரி உயிரிழந்த முத்துக்குமாரின் 2-ம் ஆண்டு நினைவுதினம் மற்றும் வெண்கல உருவ்ச்சிலை திறப்பு நிகழ்ச்சி ஜனவரி 29-ம் தேதி அவரது சொந்த ஊரான திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு முத்துக்குமார் பாசறையின் முதன்மைச் செயலர் சங்கத்தமிழன் தலைமை வகிக்கிறார். முத்துக்குமாரின் சிலையை கட்சியின் தலைவர் திருமாவளவன் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொள்ள உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications