டிஜிபியாக லத்திகா சரண் மறு நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து நடராஜ் வழக்கு
சென்னை: தமிழக டிஜிபியாக லத்திகா சரண் மீண்டும் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளை துறை டிஜிபி நடராஜ் மீண்டும் நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக லத்திகா சரண் 2010ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி நியமிக்கப்பட்டார். இதையடுத்து தன்னை விட ஜூனியரான லத்திகா சரணை டிஜிபியாக நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி நடராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், லத்திகா நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே இந்த நியமனம் செல்லாது என்று அறிவித்து மீண்டும் புதிதாக நியமன நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.
இதையடுத்து டிஜிபி அந்தஸ்தில் உள்ள அனைவரின் பட்டியலையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வானையத்திற்கு தமிழகஅரசு அனுப்பியது. அதில் சீனியாரிட்டிப்படி நடராஜ்தான் முதலிடத்தில் இருந்தார். இருப்பினும் 3வது இடத்தில் இருந்த லத்திகா சரணை மறு நியமனம் செய்து கடந்த நவம்பர்27ம் தேதி அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து லத்திகா சரண் மறு நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து நடராஜ் சென்னை நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், நீண்ட பணி அனுபவம், பல்வேறு துறைகளில் பணியாற்றியது உள்ளிட்ட விஷயங்களைப் பரிசீலித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.ஜி.பி.க்கள் அடங்கிய பட்டியலில் என்னை முதல் இடத்தில் வைத்திருந்தது. டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவதற்கு அனைத்துத் தகுதிகள் இருந்தும் என்னைத் தவிர்த்து, லத்திகா சரணையே தமிழக அரசு மறுநியமனம்
செய்துள்ளது.
என்னைத் தவிர்த்து லத்திகா சரணை சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமித்ததற்கு எந்தக் காரணமும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு தேர்வு செய்வதற்கு மாநில அரசுக்கு எந்தவித அடிப்படையும் இல்லை. கள அனுபவத்திலும், பதக்கப் பட்டியலிலும் எனக்கு அதிக அனுபவம் உள்ளது.
டி.ஜி.பி.யை மறு நியமனம் செய்யும் குழுவில் தலைமைச் செயலாளர் மாலதி இருந்துள்ளார். லத்திகாவை ஏற்கெனவே டி.ஜி.பி.யாக நியமித்து அப்போதைய உள்துறைச் செயலாளர் மாலதி உத்தரவிட்டார். இந்தக் குழுவிலும் அவரே இடம்பெற்றிருந்ததால், குழுவின் தேர்வு முறை ஒருதலைபட்சமானது என்று கருதுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே, சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக லத்திகா சரணை மறுநியமனம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அனைத்துத் தகுதிகளும் உள்ள என்னை டி.ஜி.பி.யாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார் நடராஜ்.
இந்த மனு நேற்று தீர்ப்பாய உறுப்பினர்கள் கே.இளங்கோ, ஓ.பி.சூசம்மா ஆகியோரது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கைப் பரிசீலித்த தீர்ப்பாய உறுப்பினர்கள் தலைமைச் செயலாளர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications