ஐ.நா. சபையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை எழுப்புவோம்-கத்காரி உறுதி

தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தாமரை யாத்திரையை நடத்தினார். இதன் நிறைவு விழா நேற்று சென்னை மீனம்பாக்கம் அருகே ராணுவ மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் கலந்து கொண்டனர். பாஜக தலைவர் நிதின் கத்காரிகலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில்,
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி நல்ல வளர்ச்சி பெற்று வருவதற்கு இந்த போராட்டம் ஒன்றே சான்றாக உள்ளது. மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசும், மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசும் சிறுபான்மை மக்களின் ஓட்டுகளுக்காக இந்து மாணவர்களுக்கு நிதி உதவி தொகையை வழங்க மறுக்கின்றன. உதவி தொகையை பெறும் வரை போராட்டம் தொடரும்.
ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை பாரதீய ஜனதா கட்சி உருவாக்கவில்லை. இந்திய தலைமை தணிக்கையாளர் அளித்த அறிக்கையில்தான், 2-ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் நடந்து உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள தமிழர்கள் தாக்கப்பட்டதற்காக தமிழகம் மட்டும் வருந்தவில்லை. இதை தமிழகம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக பார்க்கக் கூடாது. இந்தியாவின் தேசிய பிரச்சினையாக இதைப் பார்க்க வேண்டும்.
இலங்கை தமிழர்களின் வாழ்வுக்காக பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பும். அங்குள்ள தமிழர்களுக்காக ஐ.நா. அவையில் புகார் செய்யப்படும். இலங்கை தமிழர்கள் நலனுக்காக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மருத்துவம் உள்பட அடிப்படை வசதிக்காக ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
தமிழர்கள் முழு உரிமைகளோடு இலங்கையில் வாழ்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்கள் மரியாதையோடும், உரிமைகளோடும், கெளரவத்தோடும் வாழ்வதற்குரிய நடவடிக்கைளை செய்ய வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உள்ளது.
ராகுல் வேண்டாம்-கலாமை பின்பற்றுங்கள்
இந்தியாவில் உள்ள நதிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று அப்துல்கலாம் கூறினார். ஆனால் ராகுல்காந்தி நதிகளை இணைக்க கூடாது என்கிறார். மக்களின் நலன் பற்றி தெரியாத ராகுல் வழியை பின்பற்றாமல் அப்துல் கலாம் கூறிய வழியை பின்பற்ற வேண்டும். தமிழகத்திலும் கோடை காலத்தில் தண்ணீர், மின்சாரம் பாதிக்கப்படுகின்றன.
சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை கொண்டு வர மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்? விரைவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை கொண்டு வந்து இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க செலவிடுவோம்.
ப.சிதம்பரம் காங். தலைவராக முடியுமா?
குடும்ப வாரிசு பற்றி ராகுல் காந்தி பேசுகின்றார். இவரே வாரிசு முறையில் தான் அரசியலுக்கு வந்து உள்ளார். சுவரில் போஸ்டர் ஒட்டிய நான் அகில இந்திய தலைவர். ஆனால் காங்கிரசில் பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங், சிதம்பரம் யாராவது தலைவராக வரமுடியுமா? நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி, ராகுல்காந்தி என்று காந்தி தான் வரமுடியும்.
இந்தியாவில் உணவின்றி மக்கள் அல்லல்படுகின்றனர். ஆனால் ஆண்டு தோறும் ரூ.58 ஆயிரம் கோடி உணவு தானியங்கள் வீணாவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார். இந்த நிலை மாற வேண்டும்.
இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக உள்ளது. இதனால் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தயாராக இல்லை. இந்த நிலையை மாற்ற பாரதீய ஜனதா கட்சிக்கு மக்கள் ஆதரவு நல்கிட வேண்டும் என்றார் கத்காரி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications