முதல்வர்கள் மாநாடு, சோனியா சந்திப்பு-டெல்லி சென்றார் கருணாநிதி
சென்னை : முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
பிப்ரவரி 1ம் தேதி டெல்லியில் நடைபெறும் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் செல்வதாக கூறப்பட்டாலும் தமிழக தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து சோனியா காந்தியுடன் பேசுவதற்காக முக்கியமாக இந்த டெல்லி பயணத்தை முதல்வர் மேற்கொள்கிறார்.
டெல்லியில் முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. வழக்கமாக இதுபோன்ற மாநாடுகளுக்கு மு க ஸ்டாலின் செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை சட்டசபைத் தேர்தல் வருவதால், தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து பேச வேண்டியிருப்பதால், தானே டெல்லிக்குச் சென்றுள்ளார் முதல்வர்.
இன்று பிற்பகல் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து டெல்லி கிளம்பிச் சென்றார் கருணாநிதி. முதல்வருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.
தனது டெல்லி பயணத்தின்போது பிரதமர் மன்மோகன்சிங்கையும், சோனியா காந்தியையும் அவர் சந்திக்கவுள்ளார். பிரதமரை சந்திக்கும்போது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரம் குறித்துப் பேசுவார். அதேபோல சோனியாவை சந்தித்து, தொகுதி உடன்பாடு குறித்துப் பேசவுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு 50 இடங்கள் வரை தர திமுக தயாராக உள்ளது. இதை சோனியா காந்தியுடனான சந்திப்பின்போது உறுதி செய்யவுள்ளார் கருணாநிதி. இந்த பயணத்தின்போதே காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதையும் திமுக தெரிவிக்கவுள்ளது என்கிறார்கள்.
தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை சென்னை திரும்புகிறார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications