மீண்டும் வருவார் பிரபாகரன்-பெரும் போர் வெடிக்கும்-வைகோ
சென்னை: மீண்டும் வருவார் பிரபாகரன். இலங்கையில், மீண்டும் பெரும் போர் வெடிக்கும் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
முத்துக்குமார் நினைவு தினத்தையொட்டி நேற்று இரவு சென்னையில் அஞ்சலி பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில்,
இலங்கை தமிழர்களுக்காக உயிர் ஆயுதம் ஏந்தி தியாகச் செம்மலாக மாறிய தம்பி முத்துக்குமாரின் மரணம், தமிழ்நாட்டில் இளைஞர்களை தட்டி எழுப்பியுள்ளது. இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களை வீழ்த்த துணை போன மத்திய அரசின் துரோகத்தை மறக்க முடியாது.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்கள் குடிய மர்த்தப்பட்டு வருகிறார்கள். 300 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் 50 பேருக்கு மட்டுமே சாப்பாடு வழங்கப்படுகிறது.
இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்ற வழக்கறிஞர் கயல்விழி, பிரபாகரனின் தாயை சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று கூறியதும் அந்த தாய் கண்கலங்கி உள்ளார்.
ஈழத்தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தகுந்த நேரத்தில் அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும். நம் கண் முன்னே தமிழ் ஈழம் மலரும் என்றார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications