முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா விடுதலையை எதிர்த்து வழக்கு: சிபிசிஐடிக்கு நோட்டீஸ்
ஈரோடு: பெருந்துறையில் ஆள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தி்முக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா விடுதலையை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிவபாலன் என்பவரை கடத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, அவரது மனைவி உள்பட 7 பேரையும் விடுதலை செய்து ஈரோடு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 21- ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சிவபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
நில விவகாரம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் ஆட்கள் என்னை மிரட்டினர். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தேன். அதன் பேரில் என்.கே.கே.பி. ராஜா உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் ஈரோடு நீதித்துறை நடுவர் இந்த வழக்கில் இருந்து ராஜா உள்பட அனைவரையும் விடுவித்து கடந்த செப்டம்பர் 21-ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு ஈரோடு நீதிமன்றம் அளித்துள்ள காரணங்கள் சரியானது அல்ல. இந்த வழக்கு விசாரணை மிக வேகமாகவும், சட்டத்துக்கு விரோதமாகவும் நடைபெற்றது.
எனவே, ஈரோடு நீதித்துறை நடுவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.என். பாஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார், என்.கே.கே.பி.ராஜா உள்பட குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications