திருநங்கைகளி்ன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்-அமைச்சர் நெப்போலியன்
நெல்லை: திருநங்கைகளி்ன் கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நெல்லையில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் தெரிவித்தார்.
பாளை சேவியர் கல்லூரியில் சமூக பணித்துறை சார்பில் திருநங்கைகள் நலனுக்கான கொள்கை உருவாக்குதல் என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நேற்று துவங்கியது. கருத்தரங்கின் துவக்க விழாவில் திருநங்கை சவீதா கடவுள் வாழ்த்து நடனமாடினார். சமூக பணித்துறை தலைவர் லாரன்ஸ் அமல்ராஜ் அடிகள் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் பேசுகையில்,
திருநங்கைகளும் மனிதர்கள்தானே, அவர்கள் மற்றவர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி பல்வேறு தி்ட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ரேஷன் கார்டு, இலவச வீடு, ஓட்டுரிமை உள்பட பல்வேறு சலுகைகள் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சுய உதவி குழுக்களுக்கான கடன் வழங்குதல், இலவச டிரைவிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகளும் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு படங்களில் நான் நடித்திருந்தாலும் நெல்லையில் எடுக்கப்பட்ட புது நெல்லு, புது நாத்து, சீவலபேரிப் பாண்டி போன்ற படங்களில்தான் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. எனக்கு நல்ல பெயர் பெற்று தந்த நெல்லை மண்ணு்க்கு எந்த உதவியும் செய்யத் தயாராக இருக்கிறேன்.
மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுபோல் திருநங்கைகளுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். திருநங்கைகளை கேலி, கிண்டல் செய்பவர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். திருநங்கைகளின் கோரிக்கைகளை சட்டமாக இயற்ற மத்திய, மாநில அரசுகளுடன பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications