தூத்துக்குடியில் இந்திய போர்க்கப்பல்-பொதுமக்கள் பார்க்க அனுமதி
தூத்துக்குடி: கப்பற்படை குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய கப்பல் படைக்கு சொந்தமான போர்க்கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்துள்ளது. பொதுமக்களும், மாணவ, மாணவியரும் கப்பலை வியப்புடன் பார்த்தனர்.
இந்திய கப்பல்படை தினவிழா இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரம் கடைப்பிடிக்கப்படும். அப்போது கப்பல் படை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இதன் ஒரு பகுதியாக இந்திய கப்பல் படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் கார்முக் தூத்துக்குடி துறைமுகம் வந்துள்ளது. இந்த கப்பல் இந்திய கப்பல் படையில் கடந்த 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கப்பலில் போர்காலத்தில் பயன்படுத்தப்படும் நவீன ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளன.
பில்லர் கிளாப் என்ற வகையைச் சேர்ந்த இந்த கப்பலில் 120 கப்பற்படை அலுவலர்களும், மாலுமிகளும் உள்ளனர். தரையிலிருந்து 350 கிமீ தாக்க கூடிய ஆயுதங்கள், ஒரு நிமிடத்திற்கு 90 ரவுண்ட் சீறிப் பாயக்கூடிய சூப்பர் சானிக் கன், ஏவுகணைகள திசை திருப்பவும், தாக்கி அழிக்கவும் கூடிய ஏகே 230 ரக ஆயுதங்கள் இந்த போர்க்கப்பலில் இடம் பெற்றுள்ளன.
பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட நேற்று ஒரு நாள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தில் இருந்து வந்துள்ள இந்த கப்பல் இன்று தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications