தேமுதிக வாக்கு வங்கியை வைத்து பேரம் பேசி வருகிறார் விஜயகாந்த்-டாக்டர் கிருஷ்ணசாமி

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற பேச்சு அடிபடும் நிலையில், அக்கூட்டணியில் ஏற்கனவே சேர்ந்துள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் இந்த குற்றச்சாட்டால், லேசான பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை வந்த கிருஷ்ணசாமி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நிலைப்பாடு ஒரு மாயை. தேர்தல்களில் தே.மு.தி.க., 8 சதவீத ஓட்டு பெற்றது. எனவே தொண்டர்களுக்கு அரசியல் பங்கீடு பெற்று தரும் முறைகளை விஜயகாந்த் கையாள வேண்டும். ஆனால் அவரது கட்சி நடவடிக்கைகள் பேரம் பேசுவதாக உள்ளன. ஓட்டு வங்கியை வைத்து அரசியல் சதுரங்கம் ஆடக் கூடாது.
தேர்தலில் தி.மு.க., காங்., கூட்டணி தோற்கும். அக்கட்சிகள் இருக்கும். ஆனால் மற்ற சிறிய கட்சிகள் காணாமல் போகும். ஊழல் பணத்தை வைத்து தேர்தலை சந்திக்கும் தி.மு.க.வின் கனவு நிறைவேறாது.
அ.தி.மு.க தற்போதைய கூட்டணி கட்சிகளுடன் மட்டுமே தேர்தலை சந்தித்தால் கூட போதும், அது இமாலய வெற்றி பெறும்.
பீகாரில் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன், தேர்தல் கமிஷன் நடத்தை விதிகளை அமல்படுத்தியது. தமிழகத்தில் இனியும் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த மறுக்கிறது.
விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவைகளால் தி.மு.க., அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற புதிய தமிழகம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டங்கள் நடத்தப்படுகிறது என்றார் கிருஷ்ணசாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications