பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை: கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
சென்னை: சென்னையில் நடிகையின் புகைப்படத்தைக் காட்டி ஆந்திர வாலிபரை ஏமாற்றி கொள்ளையடித்த கும்பலை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சீனிவாசலு. இவரது மகன் மனோஜ் தேவேந்திரன் (28). அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதற்காக பத்திரிக்கை ஒன்றில் பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்திருந்தனர். அந்த விளம்பரத்தில் மனோஜின் இமெயில் முகவரி உள்ளிட்ட தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
இதைப் பார்த்த பத்ரிநாத் என்பவர் துணை நடிகை ஒருவரின் புகைப்படத்தை அனுப்பி, இவர்தான் பெண், பிடித்திருந்தால் நேரில் வருமாறு கூறியுள்ளார். போட்டோவைப் பார்த்த மனோஜுக்குப் பெண் பிடித்துப் போகவே, தனது தாய் ஜெயதேவியுடன் நேற்று சென்னை வந்தார்.
அவர்களை விமான நிலையத்திற்கு சென்று பத்ரிநாத் வரவேற்றார். பின்னர் அவர்களை ஒரு தனியார் ஹோட்டலில் தங்க வைத்து காலை உணவையும் தானே வாங்கிக் கொடுத்துள்ளார். பிறகு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தையும் கொடுத்துள்ளார். அதை குடித்த தாயும், மகனும் மயங்கினர்.
உடனே பத்ரிநாத் அவர்களிடம் இருந்த நகை, பணத்துடன் தப்பித்து விட்டார். ஜெயதேவி தன் பையில் வைத்திருந்த விலை உயர்ந்த வைர நெகலசும் பறிபோனது.
இது குறித்து வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு திவான்மியூரிலும் இதேபோன்று பெண் ஆசை காட்டி நூதனக் கொள்ளை நடந்துள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications