இலங்கை சென்றார் நிரூபமா ராவ்-மீனவர் பிரச்சினை குறித்து பேச்சு
சென்னை: மத்திய வெளியுறவு அமைச்சர் நிரூபமா ராவ் நேற்று கொழும்பு சென்றடைந்தார். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்கிக் கொன்று வரும் விவகாரம் குறித்து இலங்கையுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
முன்னதாக பெங்களூரிலிருந்து நேற்று மாலை சென்னை வந்த நிரூபமா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அண்மைக் காலமாக இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாட்களுக்குள் இரண்டு மீனவர்கள் பலியாகியுள்ளனர்.
இதற்கு தீர்வு காணும் வகையிலும், தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையால் பிரச்னை ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்காக இந்திய அரசு சார்பில் இலங்கை செல்கிறேன்.
அந்த நாட்டில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள், முக்கிய தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படவுள்ளது. ஏற்கெனவே இந்திய - இலங்கை அரசுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி கடலோர பகுதியில் கூட்டுக் குழு அமைத்து காண்காணிக்கப்படும்.
மீனவர்களை சுட்டுக் கொல்வது என்பது நிரந்தரத் தீர்வு அல்ல, சரியான தீர்வும் அல்ல. இரு நாடுகளிடையேயும் அமைதி நிலவ, துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக புதிய ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் இனி எந்த மீனவரும் சுடப்படும் நிலை உருவாகாது.
என்னைப் பொறுத்தவரை எல்லை மீறாமல் மீன் பிடித்தால் இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்கலாம் என்றார் நிரூபமா.
தனது பயணத்தின்போது இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸையும் நிரூபமா சந்திப்பார் என்று தெரிகிறது. ராஜபக்சேவை அவர் சந்திப்பாரா என்பது தெரியவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications