மகாராஷ்டிர கூடுதல் கலெக்டர் சோனாவானே எரிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி மரணம்
மும்பை: மகாராஷ்டிர மாநில கூடுதல் மாவட்ட கலெக்டர் யஷ்வந்த் சோனாவானே எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான போபட் ஷிண்டே இன்று சிகிச்சை பலனில்லாமல் உயிர் இழந்தார்.
சோனாவானேவிற்கு தீவைத்து எரித்தபோது அவர் ஷிண்டேவை கட்டிப் பிடித்தார். இதில் ஷிண்டேவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அவர் ஜேஜே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.
கடந்த 25-ம் தேதி நாசிக் மாவட்டத்தில் உள்ள மன்மத் அருகில் மண்ணெண்ணெயைத் திருடும் கும்பலைப் பிடிக்க சென்றபோது, சோனாவானே(44) மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் சிலர் இறந்த கலெக்டர் லஞ்சம் தங்களிடம் கேட்டதாக நேற்று தெரிவித்தனர். ஆனால் குற்றவாளிகள் தாங்கள் தப்பிக்க இவ்வாறு கூறுவது வழக்கம் என்று போலீசார் கூறினர்.
சோனாவானே வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் போலீஸ் காவலில் இருக்கும் 10 பேரிடமும் வாக்குமூலம் வாங்கினர். ஆனால் போபட் ஷிண்டேவிடம் வாங்காமல் இருந்தனர்.
இந்த வழக்கில் ஷிண்டே தவிர 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications