திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணி அமைவது அவசியம்-தா.பாண்டியன்
சென்னை: தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தக்கூடிய வலுவான கூட்டணி அமைவது அவசியம். அ.தி.மு.க. தலைமையில் அத்தகைய வலுவான கூட்டணி அமையும். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து வலுவான கூட்டுப் பிரசாரம் மக்களிடம் எடுத்துச் செல்லப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழு நேற்று சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் குழுவின் தலைவரும், மாநிலச் செயலாளருமான தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, மாநில தி.மு.க. அரசு ஆகியவற்றின் தவறான, மக்கள் விரோத பொருளாதார கொள்கைகள் காரணமாக விலைவாசி விஷம் போல் ஏறி விட்டது. இதன் சுமையை தாங்க முடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த விலைவாசி உயர்வுக்கு காரணமான தி.மு.க. அரசை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தக்கூடிய வலுவான கூட்டணி அமைவது அவசியம். அ.தி.மு.க. தலைமையில் அத்தகைய வலுவான கூட்டணி அமையும். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து வலுவான கூட்டுப் பிரசாரம் மக்களிடம் எடுத்துச் செல்லப்படும்.
தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் எங்கள் கட்சிக்கான தொகுதிகள் பற்றி இறுதி செய்யப்படும் என்றார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஆறில் வென்றது.
இந்த முறை 20 தொகுதிகளை அது அதிமுகவிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் 15 தொகுதிகள் வரை அதிமுக தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 5-ம் தேதி சென்னையில் அந்தக் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க.விடம் கேட்க வேண்டிய தொகுதிகளின் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் அதிமுக பேச்சு நடத்தி முடித்துள்ளது. தற்போது சிபிஐயுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அடுத்து மதிமுக, புதிய தமிழகம் உள்ளிட்டவற்றுடன் பேச்சுவார்த்தை முடிவடையும்.
பெரும் குழப்பமான நிலையில் காணப்படும் தேமுதிகவுடன் தொடர்ந்து ரகசியப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாக கூறப்படுவதால் அந்தக் கட்சியின் நிலை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications