சுயமாகவே ராஜ்யசபா உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்காக 40 சீட்களை எதிர்பார்க்கும் பாமக

பாமக எந்தக் கூட்டணியில் இடம் பெறப் போகிறது என்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. திமுக கூட்டணியில் அது இடம் பெற்றிருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியதை உடனடியாக மறுத்து விட்டார் ராமதாஸ். இதையடுத்து நாங்களும் அதுகுறித்து முடிவெடுக்கவில்லை என்று கருணாநிதியும் கூறி விட்டார்.
இந்த நிலையில் பாமகவின் எதிர்பார்ப்பு என்ன, அதற்கான காரணம் என்ன என்று தெரிய வந்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக 31 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 18 இடங்களில் வெற்றி பெற்றது.
இடையில் லோக்சபா தேர்தலின்போது அதிமுக கூட்டணிக்கு மாறிப் போட்டியிட்டது பாமக. சமீபத்தில் மீண்டும் திமுகவுக்கு வரத் தூது விட்டது. இந்த தூதுக்களுக்கு பல்வேறு பெயர்களை பாமக கூறினாலும், உண்மையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகவே பேசப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுக்களின்போது தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும், அதாவது 40 இடங்கள் தேவை என்று பாமக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் 50 தொகுதிகள் வரை கேட்டுள்ளனர்.
குறைந்தபட்சம் 35 தொகுதியாவது வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தியுள்ளது. ஆனால் இதற்கு திமுக உடன்படவில்லை.25 தொகுதிகளில் ஆரம்பித்து கடைசியாக 30 அல்லது 31 தொகுதி வரை தர முடியும் என்று தெரிவிக்கப்பட்டதாம்.
ஆனால் இதை பாமக ஏற்கவில்லை. 40 அல்லது 35 என்ற நிலையில் அது உறுதியாக இருந்தது. இதற்கு முக்கியக் காரணம், ஒருவரை ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்க குறைந்தது 34 உறுப்பினர்கள் தேவை. இந்த பலத்தை சுயமாகவே கொண்டிருந்தால் கூட்டணியிலிருந்து கழன்று கொண்டாலும் கூட சுயமாகவே ஒருவரை (வேறு யாரை, அன்புமணியைத்தான்) தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இல்லாமல் போகும் என்பதால்தான் 35 என்ற குறைந்தபட்ச நிலையிலிருந்து இறங்கி வர பாமக மறுத்ததாம்.
இதனால்தான் திமுக, பாமக இடையே திடீர் முட்டல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications