தமிழர்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை-பழ.நெடுமாறன்
ஈரோடு: ஈழத் தமிழர்கள் குறித்து மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசுக்கோ எந்தவித அக்கறையும் இல்லை. 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்து எழுந்தால் தான் தமிழக மீனவர்களையும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களையும் காக்க முடியும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமார் நினைவு வீரவணக்க நாள் கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது. தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கச் செயலர் பாவேந்தன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழ் தேசிய இன உணர்வாலும்தான் தனது உயிரை தியாகம் செய்தார். அவரது தியாகம் தமிழகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் மேலும் 15 பேர் தங்கள் உயிரை ஈழத் தமிழர்களுக்காக தியாகம் செய்தனர்.
அவ்வாறு உயிர் நீத்தவர்கள் அனைவருமே வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்த ஏழை மக்கள். தங்களிடம் உயிரைத் தவிர வேறு ஆயுதம் இல்லை என்று நினைத்து அதை தியாகம் செய்துவிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோ அரசு அளித்த நிவாரண நிதியை ஏற்க மறுத்துவிட்டனர். இந்த இன உணர்வு தமிழக இளைஞர்களுக்கு வர வேண்டும்.
கடந்த 27 ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை ஈவு இறக்கமின்றி கொன்று குவித்துள்ளது. இந்தக் கொடுமையை ஏன் என்று கோட்பாரில்லை. இந்தியா உலகின் 5-வது மிகப் பெரிய கடற்படை கொண்ட நாடு. ஆனால் அதனால் ஒரு சின்ன நாட்டின் கடற்படையை தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால் யாராவது நம்புவார்களா? தமிழர்கள் என்பதால் தான் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதே உண்மை.
எனவே தமிழக மீனவர்களையும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமெனில் தமிழகத்தில் உள்ள 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்தெழ வேண்டும்.
தமிழ்ர்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை. இன்று ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை தான் நாளை உலகத் தமிழர்களுக்கும், தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும் ஏற்படும்.
தமிழ் இனம் ஒன்று சேர்ந்தால் அதை யாராலும் வெல்ல முடியாது. இன்று, உலகத் தமிழினம் அழிவின் விளிம்பில் உள்ளது என்பதை இப்போதாவது உண்ர்ந்து செயல்படாவிட்டால் நமக்கு விடிவே கிடையாது. எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களை காக்கும் கடமை நம்முடையது என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications