பாதை பிரச்சனை-இந்து முன்னணியினர் திடீர் மறியல்-போலீசார் குவிப்பு
சிங்கை: கெபி கிறிஸ்தவ ஆலய பாதை பிரச்சனையில் இந்து முன்னணியினர் திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டதற்காக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் சிங்கை இருதயகுளம் கெபி கிறிஸ்தவ ஆலயத்தில் பொது வழிப் பாதையில் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளதால் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் இப்பகுதியில் கிருஷ்ணர் சிலையை நிறுவ இந்து முன்னணியி்னர் முயன்றதால் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் கிறிஸ்தவ சபை நிர்வாகம் தரப்பில் கட்டப்பட்ட தடுப்புச் சுவரை போலீசார் இடித்தனர். இதனால் மேலு்ம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ரமண சரஸ்வதி சம்பவ இடத்தை பார்வையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது உத்தரவின் பேரில் சர்வே எண்கள் உள்ள இடம் அளக்கப்பட்டது.
இதற்கிடையே இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் அரசு ராஜா தலைமையில் மாவட்ட தலைவர் பால் மாரியப்பன் உள்ளி்ட்டோர் தடுப்பு சுவர் கட்டியுள்ள பகுதியை பார்வையிட வந்தனர். இதற்கு கிறிஸ்தவ சபை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
இதனால் இந்து முன்னணியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டதாக 8 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிங்கை இருதயகுளம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications