தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து சுஷ்மாவை நேரில் சந்தித்து கிருஷ்ணா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதல் விவகாரம் குறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜை நேரில்சந்தித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று சுஷ்மா சுவராஜின் வீட்டுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா சென்றார். சுஷ்மாவிடம் தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட 5 முக்கியப் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசின் நடவடிக்கை குறித்து விளக்கினார்.

சமீபத்தில் தமிழக மீனவர் பிரச்சினையை ஐ.நா. சபைக்குக் கொண்டு போகப் போவதாக பாஜக தலைவர் நிதின் கத்காரி சென்னையில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் சுஷ்மாவை கிருஷ்ணா நேரில் சந்தித்து விளக்கம் தெரிவித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது, இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நிவாரண பணிகள், அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவி மாட்டிய விவகாரம், எகிப்தில் தவிக்கும் இந்தியர்களை விமானத்தில் இந்தியா அழைத்து வருதல், சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பது ஆகிய 5 பிரச்சினைகள் பற்றி எஸ்.எம்.கிருஷ்ணா என்னிடம் விளக்கம் அளித்தார். அவரது விளக்கம் திருப்தி அளிப்பதாக இருந்தது.

வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு சென்று, இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி பேசினார் என்றும், இந்த பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும் என்னிடம் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

இலங்கை தமிழர் பிரச்சினையும், தமிழக மீனவர் பிரச்சினையும் தமிழக சட்டமன்ற தேர்தலில் முக்கியமாக பிரதிபலிக்கும். மேலும் கட்சி ரீதியாக தமிழ்நாட்டின் பொறுப்பை நான் ஏற்று இருப்பதால், இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.

இலங்கை தமிழர் நிவாரண பணிக்காக இதுவரை ரூ.500 கோடி இலங்கைக்கு கொடுத்து இருப்பதாகவும், இன்னும் தேவைப்பட்டால் கொடுக்க தயார் என்றும், என்னிடம் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

மாணவர்கள் காலில் டேக் கட்டிய செயல்:

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவியை மாட்டியது, மனிதாபிமானம் அற்ற செயல். இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

எகிப்தில் தவிக்கும் இந்தியர்கள்:

எகிப்தில் தற்போது 3,200 இந்தியர்கள் தவிக்கிறார்கள். அவர்களில் 650 பேரை விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து விட்டோம். மற்றவர்களையும் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் என்னிடம் கூறினார் என்று சுஷ்மா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+