திருச்செந்தூர் அல்லது ஆலங்குளத்தில் சரத்குமார் போட்டி?: தேர்தல் பணிகளைத் துவங்கிய சமக
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆலம்குளம் அல்லது திருச்செந்தூர் தொகுதியை குறிவைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழகத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் மோதுகின்றன.
இந்த நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி திமுகவுக்கு எதிரான கூட்டணியில் இருப்போம் என அறிவித்துள்ளது. இக்கட்சி தென் மாவட்டங்களில் மட்டுமே வலுவாக உள்ளதால் திருச்செந்தூர் அல்லது ஆலங்குளம் ஆகிய இரு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் சரத்குமார் போட்டியிடுவார் என கூறப்படுகின்றது.
அதற்கு தகுந்தார் போல் அந்த இரு தொகுதிகளிலும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தேர்தலுக்கான ரகசிய வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications