உண்மையைக் கூறிவிடுவாரோ என்ற பயம் காரணமாக ராசாவை ஆதரிக்கும் கருணாநிதி : வைகோ
திருச்சி: சிபிஐ காவலில் உள்ள ராசா எங்கே விசாரணையில் 2ஜி ஊழலில் யார், யாருக்கெல்லாம் பங்கு இருக்கிறது என்பதை சொல்லி விடுவாரோ என்ற பயத்தினால் தான் கருணாநிதி ராஜா மீது தவறு இல்லை என திமுக பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து வைகோ திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது,
ராசாவை 2ஜி ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. கைது செய்த பிறகு ராசா மீது எந்த தவறும் இல்லை. இது எதிர்கட்சிகளின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சூழல். ராசாவை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அதை பொருட்படுத்த வேண்டுமே தவிர தற்போது அதை பொருட்படுத்தத் தேவையில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அதுவே நீதிமன்றம் ராசாவை குற்றவாளி என்று தண்டித்தால், நீதிமன்றமும் தவறு செய்யலாம் அதனால் மக்கள் மன்றம் அதை பெரிதுபடுத்தக் கூடாது என்று கருணாநிதி வசனம் எழுதியிருப்பார்.
கருணாநிதி எதற்காக இந்த நிலைபாட்டை எடுத்தார்? இந்த ஊழல் பணம் எங்கெல்லாம் போனது? என்பது தான் கேள்வி. எங்கே உண்மையை ராஜா சொல்லிவிடுவாரோ என்ற பயத்தினால் அல்லவா இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications