வேறு வழியின்றி இறங்கி வந்த மத்திய அரசு! நட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கரப்பான் பூச்சி கட்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரப்பான் பூச்சி கட்சி இன்று நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், அங்கு பெருந்திரளான மக்கள் கூடி வருகிறார்கள். இதற்கிடையே ஒரு வழியாக இறங்கி வந்துள்ள மத்திய அரசு, கரப்பான் பூச்சி கட்சி பிரமுகர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வில் கடந்த சில ஆண்டுகளாகவே குளறுபடிகள் தொடரும் நிலையில், இதனால் பல லட்சம் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கண்டித்தும், முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

neet delhi protest CJP Cockroach Janta Party

போராட்டம்

இதன் ஒரு பகுதியாக இன்று காலை நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், டெல்லி போலீசார் அவர்களை பேரணியாக செல்ல அனுமதிக்கவில்லை. இருப்பினும், பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் மக்கள் போராட்ட களத்திற்கு தொடர்ந்து திரண்டு வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் எந்தவொரு கட்சியையும் சார்பில்லாதவர்கள்.

திரளும் கூட்டம்

சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவிக்கவும், நீட் முறைகேடுகளுக்கு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்பதே திரண்டு வரும் பெரும்பாலான மக்களின் கருத்தாக இருக்கிறது. காலையில் ஓரிரு இடங்களில் தடியடி நடத்தப்பட்ட போதிலும், பெரும்பாலும் அமைதியான முறையிலேயே போராட்டம் நடக்கிறது. போலீசார் பேரணிக்கு அனுமதி வழங்க மறுக்கும் நிலையில், இன்னொரு பக்கம் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த மெட்ரோ நிலையங்களை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கையை எடுத்தாலும் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இதுநாள் வரை போராட்டக்காரர்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் மத்திய அரசு நடத்தாமல் இருந்த சூழலில் இப்போது இறங்கி வந்துள்ளது. தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகக் கரப்பான் பூச்சி கட்சி தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்திக்கச் செல்வதாகக் கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை

இது தொடர்பாகக் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "கரப்பான் பூச்சி கட்சி சார்பில் நானும், செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்காவும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்திக்கச் செல்கிறோம். இன்று காலை மத்திய அரசே பேச்சுவார்த்தைக்காக எங்களைத் தொடர்புகொண்டது. எங்களது கோரிக்கைகள் மிகவும் தெளிவாக உள்ளன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்திற்காக திரண்டுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்..

நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட கல்வி தொடர்பான பிரச்சினைகளில் சீர்திருத்தங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக இருக்கிறது. ஒருபுறம் நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகள் அமளியால் தொடர்ந்து முடங்கி வரும் சூழலில், மற்றொரு பக்கம் இந்த போராட்டமும் அதிகரிப்பதால் மத்திய அரசு கடும் அழுத்தத்தில் இருக்கிறது.

சோனம் வாங்சுக்

இந்த போராட்ட களத்தில் தான் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இருப்பினும், கடந்த சனிக்கிழமை டெல்லி போலீசார் அவரை போராட்ட களத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இப்போது அவர் மருத்துவமனையில் இருக்கிறார். இருப்பினும், தன்னை சட்டவிரோதமாகத் தடுப்பு காவலில் வைத்துள்ளதாகவும் தான் போராட்ட களத்திற்குத் திரும்பத் தயாராக இருப்பதாகவும் சோனம் வாங்சுக் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+