எஸ்.ஐக்கு மதுரை மதுரை உயர் நீதிமன்றம் அபராதம்
மதுரை: மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்த எஸ். ஐ.-க்கு மதுரை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தீயணைப்பு அதிகாரி குமார். கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 -ம் தேதி கரிவலம் வந்தநல்லூர் எஸ்.ஐ கமலா மற்றும் முருகானந்தம், ஏட்டுகள் மாடசாமி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் குமாரை சித்ரவதை செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் அவர் நஷ்டஈடு கேட்டு மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆணையம், ஓய்வு பெற்ற தீயணைப்பு அதிகாரி குமாருக்கு ரூ. 40 ஆயிரம் நஷ்டஈடு வழங்கவும், நான்கு காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நான்கு பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் பால்வசந்தகுமார், சுப்பையா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஓய்வு பெற்ற தீயணைப்பு அதிகாரி குமாரை காவலர்கள் சித்ரவதை செய்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை மனுதாரர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்ய டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். அதை ரத்து செய்ய முடியாது.
எஸ்.ஐ. முருகானந்தம் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ஏற்கனவே மனுத்தாக்கல் செய்து அதை திரும்ப பெற்றுள்ளார். அவருக்கு மறுபடியும் வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவு அளிக்கவில்லை.
எனவே, எஸ்.ஐ. முருகானந்தத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications