உடல்நிலை மோசமடைந்தது.... நினைவிழந்தார் பார்வதி அம்மாள்!
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கவலைக்கிடமாக இருப்பதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் தன் சுயநினைவை இழந்துவிட்டதாக சாவகச்சேரி மருத்துவமனை தகவல் தெரி்வித்துள்ளது.
சில தினங்களாக, பேசும் சக்தியை முற்றிலும் இழந்துவிட்ட பார்வதி அம்மாள், யாரையும் அடையாளம் காண்பதிலும் சிரமம் இருந்தது.
பார்வதி அம்மாளின் கணவர் இறந்ததில் இருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம்தான் அவரைப் பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக வரும் தகவல்கள் கவலையடைய வைத்துள்ளன.
கணவர் வேலுப்பிள்ளை மறைவுக்குப் பிறகு, உடல்நிலை மோசமடைந்த நிலையில் மலேசியாவில் உள்ள மகள் வீட்டுக்குப் போன பார்வதி அம்மாள், மேல் சிகிச்சைக்காக உரிய விசாவுடன் தமிழகம் வந்தார். அவரை விமான நிலையத்தில் இறங்க விடாமல் திருப்பியனுப்பியது இந்திய / தமிழக அரசு.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய / தமிழக அரசுகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இது மத்திய அரசு விவகாரம், தங்களுக்கு எதுவும் தெரியாது தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் பார்வதி அம்மாளை தமிழகம் வந்து சிகிச்சைப் பெற்றுச் செல்ல கேட்டுக் கொண்டன அரசுகள். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்ட அந்த மூதாட்டி, தனது சொந்த ஊரான இலங்கை வல்வெட்டித் துறை மருத்துவமனையிலேயே சிகிச்சைப் பெற்று வந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications