கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் எஸ்.ஐ. தீக்குளிக்க முயற்சி
நாகை: நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற எஸ். ஐ. ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஒரு ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஆவார். அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு தரப்பினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் கூறியிருந்தார்.
ஆனால் அவர் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனினும், அவர் தனது கோரிக்கையை வலியுறுத்தி 7 முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி கொடுத்த மனுவில், எனது புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காவிட்டால் பிப்ரவரி 7-ம் தேதியன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பேன் எனக் கூறியிருந்தார்.
அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற விஸ்வநாதனை போலீசார் மீட்டு கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications